;
Athirady Tamil News

14,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள்: திகில் கிளப்பும் பிரித்தானிய உள்துறைச் செயலர்

0

அடுத்த ஆறு மாதங்களில் 14,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார் பிரித்தானியாவின் உள்துறைச் செயலர்.

யார் வந்தாலும் இதே வேலைதான்…
பிரித்தானியாவில் எத்தனை ஆட்சி மாறினாலும், யார் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், அவர்கள் பேசும் முதல் விடயம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதைக் குறித்ததாகத்தான் உள்ளது.

முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சி உள்துறைச் செயலர்களான பிரீத்தி பட்டேல், சுவெல்லா பிரேவர்மேன், ஜேம்ஸ் கிளெவர்லி ஆகியோரும் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது குறித்து பேசியே பதவியிலிருந்து காணாமல் போனார்கள்.

அதெல்லாம் தெரிந்தும், இப்போது பிரித்தானியாவின் புதிய உள்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள Yvette Cooperம் அதே பாட்டைப் பாட ஆரம்பித்துள்ளார்.

திகில் கிளப்பும் பிரித்தானிய உள்துறைச் செயலர்
ஆனால், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் சாதாரணமாக சொல்லவில்லை Yvette Cooper.

எடுத்த உடனேயே, அடுத்த ஆறு மாதங்களில் 14,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார் அவர்.

வெறும் பேச்சோடு விடவில்லை Yvette Cooper. அதற்கான நடவடிக்கைகள் சிலவற்றையும் அவர் துவங்கியாயிற்று.

நாடுகடத்தப்பட இருக்கும் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டோருக்காக, Campsfield House மற்றும் Haslar என்னும் இரண்டு இடங்களிலுள்ள புலம்பெயர்தல் மையங்கள் திறக்கப்படுவதுடன், கூடுதலாக 290 பேரை தங்கவைக்க படுக்கைகளும் தயாராவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.