;
Athirady Tamil News

10,500 கொலைகளுக்கு உடந்தை: 99 வயது பெண்ணின் மேல்முறையீட்டை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம்

0

10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 99 வயது பெண்ணொருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று.

99 வயது பெண்ணின் மேல் முறையீடு நிராகரிப்பு
நாஸி ஜேர்மனியில், Stutthof சித்திரவதை முகாமில் பணியாற்றியவரான Irmgard Furchner (99) என்னும் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் அந்தப் பெண்.

யார் அந்தப் பெண்?
Irmgard Furchner என்னும் அந்தப் பெண், நாஸி ஜேர்மனியில் Stutthof சித்திரவதை முகாமில் நாஸி தளபதி ஒருவரின் செயலாளாராக பணியாற்றியவராவார்.

அவர் பணியாற்றிய அந்த சித்திரவதை முகாமில், 10,505 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், 5 கொலை முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் Irmgard மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், அவரது சட்டத்தரணிகள், உண்மையாகவே Irmgard அத்தனை கொலைகளைச் செய்த தளபதிகளுக்கு உடந்தையாக இருந்தாரா, அந்த சித்திரவதை முகாமில் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தாரா என சந்தேகம் எழுப்பினார்கள்.

Itzehoe நீதிமன்ற நீதிபதிகளோ, அந்த சித்திரவதை முகாமில் நடந்த அனைத்தையும் Irmgard அறிந்திருந்தார் என்றும், அவர் மனம் அறிய, அந்த 10,505 பேரின் கொடூர கொலைகளை ஆதரித்தார் என்பதை தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

அந்த தீர்ப்பை எதிர்த்து Irmgard மேல்முறையீடு செய்ய, பெடரல் நீதிமன்றம், Itzehoe நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததுடன், அவரது மேல்முறையீட்டையும் நிராகரித்துவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.