;
Athirady Tamil News

உலகின் மிக வயதான பெண் காலமானார்: அவரின் வயது என்ன?

0

ஸ்பெயினைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்ணான மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் காலமானார்.

மரியா பிரான்யாஸ்
அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் மோரா (Maria Branyas Morera) என்ற பெண், பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டனின் மறைவுக்குப் பின் உலகில் அறியப்பட்ட மிகவும் வயதான நபராக, Gerontology ஆராய்ச்சி குழுவால் பட்டியலிடப்பட்டார்.

இவர் 1907ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். பின் அவர் குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

பிரான்யாஸ் முதலாம் உலகப்போரின்போது அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சென்ற நினைவுகள் தனக்கு இருப்பதாக கூறியிருந்தார்.

117வது வயதில்
இந்த நிலையில், கடந்த 2 தசாப்தங்களாக முதியோர் இல்லத்தில் வாழ்வை கழித்த பிரான்யாஸ், தனது 117வது வயதில் உயிரிழந்துள்ளார்.

பிரான்யாஸ் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா பிரான்யாஸ் தூக்கத்தில், நிம்மதியாக, வலியின்றி அவர் விரும்பிய வழியில் எங்களை பிரிந்துவிட்டார்” என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பிரான்யாஸ் தனது குடும்பத்தினரிடம், “எப்போது என்று எனக்கு தெரியாது, ஆனால் மிக விரைவில் இந்த நீண்ட பயணம் முடிவுக்கு வரும். இவ்வளவு வாழ்ந்ததால் மரணம் என்னை சோர்வடையச் செய்யும். ஆனால் நான் அதை ஒரு புன்னகையுடன் சந்திக்க விரும்புகிறேன், சுதந்திரமாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.