தொழிலாளிக்கு ஜெட் வசதி! சிக்கலில் ஸ்டார்பக்ஸ்!
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கவுள்ள பிரையன் நிக்கோல், தான் பயணம் செய்வதற்காக ஜெட் கேட்டுள்ளார்.
சிபோடிலின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் நிக்கோல், காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக, அடுத்த மாதம் முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நிலையில், பிரையன் பணிபுரிய வேண்டியிருந்தால், ஒவ்வொரு முறையும் 1600 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், பிரையன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்; ஆனால், ஸ்டார்பக்ஸ் தலைமை அலுவலகம் சியாட்டிலில் உள்ளது.
மேலும், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் கொள்கைப்படி, வாரத்தில் மூன்று நாள்களாவது அலுவலகத்தில் பணிபுரிய வேண்டும். இதனால், பிரையனுக்கு அலுவலகத்தில் வேலை இல்லையெனினும், அலுவலகத்திற்கு வரவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்.
இதனையடுத்து, தனது பயணத்திற்காக, ஒரு ஜெட் விமானத்தைக் கோரிய பிரையன், சலுகை கடிதம் அனுப்பியுள்ளார்.
இருப்பினும், ஒரு சராசரி ஊழியருடன் ஒப்பிடும்போது, அதிக திறன்வாய்ந்த உயர் பதவியில் உள்ள நிர்வாகிகளுக்கு, இத்தகைய வசதியான விதிமுறைகள் பொதுவானவையே.
பிரையனுக்கு ஒவ்வோர் ஆண்டும் 1.6 மில்லியன் டாலர் அடிப்படை சம்பளமாக வழங்கப்படும்; மேலும், அவரது செயல்திறனைப் பொறுத்து, வெகுமதியாக 3.6 மில்லியன் டாலர் முதல் 7.2 மில்லியன் டாலர் வரை வழங்கப்படலாம்.
மேலும், ஸ்டார்பக்ஸின் தற்போதைய சரிவின் காரணமாக, பிரையனுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், நிறுவனங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில், பிரையன் வலுவான சாதனை படைத்துள்ளார்.
அவர், சிபோட்டிலின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தபோது, அதன் பங்கு 773 சதவிகிதம் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.