பிரித்தானியாவில் கலவரங்களுக்கு காரணம்… பொலிசாரிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்
பிரித்தானியா முழுக்க கலவரம் வெடிக்க காரணமான தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாகூர் நகரின் கிழக்கே
குறித்த நபர் ஒரு ஃப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர் எனவும் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது லாகூர் நகரின் கிழக்கே கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றின் சமூக ஊடக பக்கத்தில் குறித்த நபர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதாவது Southport தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், மிக சமீபத்தில் சிறு படகு மூலமாக அவர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளார் என்றும் தகவல் பரப்பப்பட்டது.
Channel3 Now என்ற செய்தி நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இணையமூடாக செயல்பட்டு வருகிறது. குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல்கள் சமூக ஊடகத்தில் தீயாக பரவ,
அடுத்த சில மணி நேரங்களில் வலதுசாரிகள் தங்கள் சமூக ஊடக குழுக்களில் அதை பகிர்ந்துள்ளதும், அடுத்த நாள் கலவரம் வெடிக்க அது காரணமாக அமைந்துள்ளது.
தவறான தகவல் காரணமாக
இதனையடுத்து விளக்கமளித்த பொலிசார், தாக்குதல்தாரி பிரித்தானியர் என்றும், அவர் வேறு சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, Channel3 Now செய்தி ஊடகத்தின் முதன்மை நிர்வாகி ஒருவர், தவறான தகவலை வெளியிட்டடஹ்ற்கு மன்னிப்புக் கோரியுள்ளதுடன், விளக்கமும் அளித்திருந்தார்.
இருப்பினும், Channel3 Now வெளியிட்ட தவறான தகவல் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஒரு வார காலம் கலவரம் நீடித்ததுடன், கைதானவர்கள் எண்ணிக்கை 1000 கடந்தது. மேலும், தீவிர வலதுசாரிகள் காரணமாகவே நாடு ஸ்தம்பித்தது என்றும் அதிகாரிகள் தரப்பில் குற்றஞ்சாட்டினர்.