;
Athirady Tamil News

சுதாரித்துக்கொண்ட ரஷ்ய ராணுவம்: உக்ரைன் படைகளின் இன்னொரு திட்டம் தோல்வி

0

ரஷ்யாவின் இன்னொரு எல்லையோர பிராந்தியத்தில் ஊடுருவ உக்ரைன் படைகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை முறியடித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.

உக்ரைன் படைகள் ஊடுருவ முயற்சி
ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ஏற்கனவே உக்ரைன் படைகள் ஊடுருவி பல கிராமங்களை கைப்பற்றியதுடன், மூன்று பிரதான பாலங்களையும் தகர்த்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவின் மேற்கு பிரையன்ஸ்க் (Bryansk) பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அப்பகுதி ஆளுநர் தெரிவிக்கையில், உக்ரைன் படைகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் Klimov மாவட்டத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவ முயன்றுள்ளது என்றும், ரஷ்ய வீரர்கள் தக்க பதிலடி அளித்துள்ளதாகவும் ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், எதிரிகள் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, 2022 பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக புதன்கிழமை மிக மோசமான ட்ரோன் தாக்குதலை ரஷ்யா எதிர்கொண்டது.

முன்னேற்றத்தை தடுக்க முடியாமல்
ரஷ்ய தலைநகர் மீது இலக்கு வைக்கப்பட்ட அந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

கடந்த வாரத்தில் அடுத்தடுத்த தாக்குதல்களில் மூன்று பிரதான பாலங்களை உக்ரைன் படைகள் சேதப்படுத்தின. மட்டுமின்றி, பல்வேறு விமானத் தளங்கள் மற்றும் ஒரு எண்ணெய் கிடங்கு என உக்ரைன் படைகள் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்தது.

உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்க முடியாமல், பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது. அத்துடன், உக்ரைன் கைப்பற்றியுள்ள பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.