;
Athirady Tamil News

பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு முடிவுகள்

0

பிரித்தானியாவில் சமீபத்தில் வெடித்த வன்முறைகளுக்குப் பிறகு, பிரித்தானியர்களுக்கு புதிதாக ஒரு அச்சம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியர்களுக்கு உருவாகியுள்ள புதிய அச்சம்
பிரித்தானியாவில் சமீபத்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்த வன்முறைகளைத் தொடர்ந்து, பிரித்தானியர்களில் நான்கில் மூன்று பங்கு மக்களுக்கு வலதுசாரியினர் குறித்த அச்சம் உருவாகியுள்ளதாக Ipsos என்னும் ஆய்வமைப்பு வெளியிட்ட சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்த வன்முறைகளுக்கு, பொதுவாக, அரசியல்வாதிகள் யாரும் சரியாக ரியாக்ட் செய்யவில்லை என மக்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எதைக் குறித்தெல்லாம் அச்சம்?
மக்களிடம் எந்தெந்த விடயங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, பொது சேவைகள் குறித்து என 84 சதவிகிதம் பேரும், பொருளாதாரம் குறித்துதான் அதிக கவலை என 83 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக, வலதுசாரி பயங்கரவாதம் குறித்துதான் தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக, 73 சதவிகிதம் பிரித்தானியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இதே கேள்விகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் மக்களிடையே கேட்டபோது, பயங்கரவாதம் குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாக தெரிவித்தவர்களின் எண்ணிக்கையைவிட, தற்போது வலதுசாரி பயங்கரவாதம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.