டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேம்பாடு தொடர்பான பயிற்சிப் பட்டறை
சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மேம்பாடு தொடர்பான பயிற்சிப் பட்டறையானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் (22.08.2024) யாழ் திண்ணை ஹொட்டலில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான ஒரு அங்கமாக டிஜிட்டல் முறையில் எவ்வாறு சந்தைப்படுத்தலாம் என்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.
இப் பயிற்சிப் பட்டறையின் இறுதி நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், மாறிவரும் உலகில் இளைய சந்ததியினர் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணைந்து வருவதனால் இவ்வாறான பயிற்சி அத்தியாவசியமாகிறது எனவும், இதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறைக்கு இப் பயிற்சிப் பட்டறை உதவியாகவிருக்கும் என்றும், பயிற்சி பெற்றவர்கள் அக்கறையுடன் செயற்பட்டு சவால்களை எதிர்கொண்டு வளர்ச்சி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மாவட்டச் செயலக திறன் அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில், இந்த பயிற்சிப் பட்டறையானது தெரிவுசெய்யப்பட்ட 40 சிறுமுயற்சியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு Australian AID மற்றும் Skills for Inclusive Growth அமைப்பின் அனுசரணையில் பயிற்சி வழங்கப்பட்டது.