;
Athirady Tamil News

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரை தேர்தல் பிரச்சாரம்!

0

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று (22.08.2024) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்த பயணம் பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நாளை நகரும் என திட்டமிடப்பட்டிருக்கிறது.

தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களுக்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும்.

இதேவேளை, வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரச்சாரப்பணிகளும் திட்டமிடப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.