;
Athirady Tamil News

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியால் நடிகர் விஜய்க்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

0

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை தலைவர் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

சிவப்பு, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள் மற்றும் நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளின் படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆனந்தன் வெளியிட்ட கருத்து,

கடந்த 1993ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

அசாம், மணிப்பூர் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளும் யானை சின்னத்தினை எந்த வடிவிலும் கட்சிக் கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும்.

மேலும், தேர்தல் காலங்களில் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

இந்நிலையில், உடனடியாக தங்கள் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.