உக்ரைன் அதிபருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி
உக்ரைன் (Ukraine) அதிபர் ஜெலன்ஸ்கியிற்கும் (Volodymyr Zelenskyy) பிரதமர் நரேந்திர மோடியிற்கும் (Narendra Modi ) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (23) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டு தனது அன்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார்.
அரசு முறை
அத்தோடு, அரசு முறை பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி, கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி (Mahatma Gandhi) சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இதையடுத்து, போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
போர் பேச்சுவார்த்தை
ரஷ்யா (Russia) உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரமதர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.