;
Athirady Tamil News

திடீரென உள்வாங்கிய நடைபாதை: குழிக்குள் மூழ்கிய பெண்ணை மீட்கும் பணி தீவிரம்!

0

மலேசியாவின் கோலாலம்பூரில் திடீரென உருவான குழியில் பெண் ஒருவர் மூழ்கி காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென உருவான குழி
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட 8 மீட்டர் ஆழ குழியில் சிக்கிக் கொண்டதை அடுத்து மீட்பு குழுவினர் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

48 வயதான இந்திய பெண் ஒருவர் ஜாலான் இந்தியா மஸ்ஜித் (Jalan India Masjid) அருகில் உள்ள சாலையோர நடைபாதையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென உள்வாங்கிய தரைப்பகுதி அவரை குழிக்குள் ஆழ்த்தியது.

சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில், மீட்பு குழுவினர் கோடாரிகளை கொண்டு குழியை தோண்டுவதை பார்க்க முடிகிறது.

இருப்பினும், குழிக்குள் மூழ்கிய பெண் தென்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் அந்த வீடியோவில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமாக நடைபெறும் மீட்பு பணி
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் நேரப்படி 08:22க்கு கோலாலம்பூர் தீ மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 15 தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியை நடத்தி வருகின்றனர்.

அத்துடன் மலேசியாவின் சிறப்பு தந்திரோபாய நடவடிக்கை மற்றும் மீட்புக் குழு(STORM) மற்றும் K9 குழு ஆகியவை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீட்பு குழு தலைவர் Mohd Riduan Akhbar வழங்கிய தகவலில், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதுடன், சாட்சிகளிடம் இருந்து வாக்குமூலம் பெற்று என்ன நடந்தது என்பது குறித்து துல்லியமான படத்தை வரைந்து மீட்பு பணியை முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.