;
Athirady Tamil News

90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு : எங்கு தெரியுமா !

0

அமெரிக்காவின் (America) டெக்ஸாஸ் (Texas) மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சிலை இந்தியாவுக்கு (India) வெளியே நிறுவப்பட்டுள்ள மிக உயரமான ஹனுமன் சிலை மற்றும் அமெரிக்காவில் மூன்றாவது உயரமான சிலையாகும்.

நியூயாா்க்கில் (New York) உள்ள சுதந்திர தேவி சிலை (151 அடி), ஃபுளோரிடாவின் (Florida) ஹாலண்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் மற்றும் டிராகன் சிலை (110 அடி) ஆகியவை அமெரிக்காவின் முதல் இரண்டு உயரமான சிலைகள் ஆகும்.

ஹனுமன் சிலை

இந்தநிலையில், டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் இருந்து சுமாா் 35 கி.மீ. தொலைவில் இருக்கும் சுகா் லேண்ட் பகுதியில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோயில் வளாகத்தில் இந்தப் பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வில் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டா்) மூலம் சிலைக்கு மலா் தூவி, புனித நீா் தெளித்து மற்றும் 72 அடி நீள மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.

தன்னலமின்மை, பக்தி மற்றும் ஒற்றுமையை அடையாளப்படுத்தும் இச்சிலைக்கு ஸ்ரீராமரையும் மற்றும் சீதையையும் இணைப்பதில் ஹனுமனின் முக்கியப் பங்குக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒன்றிணைப்பு (யூனியன்) சிலை எனப் பெயரிடப்பட்டதாக சிலை அமைப்பாளா்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.