வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் குடிங்க: கண்கூடாக தெரியும் மாற்றம்
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெல்லிக்காய்
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒரு கனியாக நெல்லிக்காய் இருக்கின்றது. அதிகளவு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக் கொண்ட இது ஏழைகளின் கனியாகவும் இருக்கின்றது.
தினமும் ஒரு நெல்லிக்காய் நாம் எடுத்துக்கொண்டால் பல நோய்களிலிருந்து விடுபடலாம். அந்த வகையில் காலை வெறும்வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸ் பருகினால் என்ன பயன் என்பதை தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகின்றது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் செய்கின்றது.
வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதற்கு நெல்லிக்காய் முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஊட்டச்சத்து உறிஞ்சுவதற்கும் இது உதவுகின்றது.
செரிமான அமைப்பை சுத்தப்படுத்த உதவுவதுடன், நச்சுக்களைவும் நீக்குகின்றது. மேலும் குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சேர்வதை தடுக்கவும் உதவுகின்றது.
நொதிகளின் சுரப்பை ஊக்குவிப்பதன் மூலம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. வெறும்வயிற்றில் நெல்லிக்காய் சாறை பருகுவதால் வீக்கம், அஜீரணம் போன்ற பொதுவாக பிரச்சனையை போக்க உதவுகின்றது.
ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு இது உதவுகின்றது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜுஸை குடிப்பது, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகவும் காணப்படுகின்றது.
நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் தொகுப்புக்கு பங்களிப்பதுடன், முன்கூட்டியே வயதாகும் தோற்றத்தை ஏற்படுத்துவதை தடுப்பதுடன், தோலை பளபளப்பாகவும் வைக்க பயன்படுகின்றது.
முடி ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் அதிகமாக உதவி செய்கின்றது. அதாவது நெல்லிக்காய் சாறை தவறான உட்கொண்டு வந்தால் மயிர்க்கால்களை வலுப்படுமுத்தவும், முடி உதிர்வை தடுக்கவும் செய்யலாம்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதுடன், இது உடம்பில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றது. கீழ்வாதம் மற்றும் பிற அழற்சி கோளாறுகள் போன்ற பிரச்சனைகளை தடுக்கின்றது.