;
Athirady Tamil News

அனுர வெற்றிபெற்றால் உருவாகவுள்ள ஆட்சி கட்டமைப்பு தொடர்பில் வெளியான தகவல்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், சர்வாதிகாரியாக நாட்டை ஆளமாட்டார் என ஜனதா விமுக்தி பெரமுணையின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

தனியார் யூடியூப் தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது அரசியலை புரிந்துக் கொள்வதில் மக்களுக்கு சில கடினத்தன்மைகள் இருப்பது உண்மை. எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் நாம் பதவி ஆசையில் தேர்தெடுத்தவை அல்ல.

கட்டமைப்பு
அனுரவை எமது கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்த நாம், இன்று அவரை ஜனாதிபதி வேட்பாளாராகவும் அறிவித்துள்ளோம்.

அவர் வெற்றி பெற்றால் சர்வாதிகாரமாக முடிவுகளை எடுக்க மாட்டார். அவரை போலியாக முன்னிறுத்தி பின்னால் இருந்தும் முடிவுகள் எடுக்கப்படாது. அவர் திறமையானவர், அவருடன் கலந்தாலோசித்து நாம் முடிவுகளை எடுப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.