;
Athirady Tamil News

சமூக வலைதளத்தில் சாதனை படைத்த உக்ரைன் அதிபர் வெளியிட்ட புகைப்படம்

0

இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியுடனான (Narendra Modi) உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.

முதன் முறையாக உக்ரைனுக்குச் (ukraine) சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை நேற்று முன் தினம் (23) உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துறையாடியுள்ளார்.

அப்போது மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட, ஸெலென்ஸ்கி அதனை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியா – உக்ரைன்
அதில், இந்தியா – உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது’ என குறிப்பிட்டுள்ளார்.

ஸெலென்ஸ்கியின் இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட ‘லைக்ஸ்’களை பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியுள்ளது.

இதற்கு முன் 7.8 இலட்சம் ‘லைக்ஸ்’களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது. தற்போது மோடியுடனான இந்த புகைப்படம் அதை முறியடித்திருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.