;
Athirady Tamil News

மொத்தமாக அழித்துவிடத் துடித்தார்… அவர்களுக்கே வினையாக முடிந்தது: ஜெலென்ஸ்கி வெளிப்படை

0

உக்ரைனை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என ரஷ்யா துடித்ததாகவும், ஆனால் அவர்கள் தொடங்கிய இந்த போர் தற்போது அவர்கள் வாசலை சென்றடைந்துள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான கட்டத்தில்
உக்ரைன் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு காணொளி ஒன்றின் ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீது அதிரடி ஊடுருவலை முன்னெடுத்துள்ளதை நாட்டு மக்களிடம் பதிவு செய்தார்.

2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த நீண்ட போரானது தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மட்டுமின்றி, இந்த நெருக்கடியான கட்டத்தில் உக்ரைன் மக்கள் தங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அதிரடியாக ஊடுருவி விளாடிமிர் புடின் நிர்வாகத்திற்கு நெருக்கடியை அளித்துவருகிறது. ஆனால் ரஷ்யா கிழக்கு உக்ரேனிய நகரங்களில் முன்னேறி வருகிறது.

ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், ஆகஸ்டு 6ம் திகதி உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் சத்தமில்லாமல் சம்பவம் செய்து உலக நாடுகளை அதிர்ச்சியில் தள்ளிய பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் தான் காணொளியை பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தீமையை விதைக்க நினைக்கும்
உக்ரைன் படைகள் மீண்டும் ஒருமுறை வியக்க வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, பதிலடி என்றால் என்ன என்பதை ரஷ்யா இனி தெரிந்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா எப்போதும் உக்ரைன் நாட்டை மொத்தமாக அழிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வந்துள்ளது. நாம் நமது 33வது சுதந்திர நாளை கொண்டாடும் வேளையில், நமது நாட்டிற்கு எதிரி என்ன கொண்டுவந்தானோ அதையே அவன் நாட்டுக்கும் நாம் திருப்பி அளித்துள்ளோம் என்றார்.

மேலும், நம் நாட்டில் தீமையை விதைக்க நினைக்கும் எவனும் அதன் பலனைத் தங்கள் நாட்டில் அறுவடை செய்வான். இது ஒன்றும் கணிப்பு அல்ல, கொண்டாடும் நிலை அல்ல, கண்மூடித்தனமான பழிவாங்கலும் அல்ல. அது உக்ரைன் மக்களுக்கான நியாயம் என்றார் ஜெலென்ஸ்கி.

You might also like

Leave A Reply

Your email address will not be published.