மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய ஜேர்மானியர்கள்: பக்கத்து நாட்டு பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
ஜேர்மனியில் அமைந்துள்ள குற்றவாளிகளுக்கான மன நல மருத்துவமனையிலிருந்து நான்கு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவர் சிக்கியுள்ளதாக ஆஸ்திரியா நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நான்கு பேர்
இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 17ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள குற்றவாளிகளை அடைக்கும் மன நல மருத்துவமனை ஒன்றிலிருந்து நான்கு குற்றவாளிகள் தப்பியோடினார்கள்.
மருத்துவமனை காவலர்களில் ஒருவரை காயப்படுத்திவிட்டு, அவரை மிரட்டி கதவைத் திறக்கவைத்து, அங்கிருந்து தப்பியுள்ளார்கள் அவர்கள்.
ஆஸ்திரியா பொலிசார் தெரிவித்துள்ள தகவல்
இந்நிலையில், ஜேர்மன் ஆஸ்திரிய நாடுகளில் எல்லையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையிலிருந்து தப்பிய அந்த நான்குபேரில் ஒருவர், தங்களிடம் சிக்கியுள்ளதாக ஆஸ்திரியா நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று முன் தினம் அவரை ஆஸ்திரியா நாட்டு பொலிசார் கைது செய்ததைத் தொடர்ந்து, அவரை ஜேர்மனிக்குக் கொண்டு வரும் முயற்சிகளை ஜேர்மன் பொலிசார் துவக்கியுள்ளார்கள்.
அதே நேரத்தில், தப்பியோடியவர்களில் மற்ற மூன்று பேர் தலைமறைவாகிவிட்டார்கள். அவர்கள் இதுவரை சிக்கவில்லை.