;
Athirady Tamil News

இந்த வகையான மருந்துகள் உயிருக்கே ஆபத்து..156 மருந்துகளுக்கு தடைவிதித்த மத்திய அரசு!

0

பாராசிட்மல் கலப்பு மருத்துகள் உள்ளிட்ட 156 மருந்துகளை மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருந்துகளை சுகாதார அமைச்சகத்தின் குழு சில வகை மருந்துகளை ஆய்வுக்கு செய்தது .azithromycin உடன் adapalene என்ற வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்யப்படும் மருந்துகள் முகப்பரு தழும்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டும் மத்திய அரசு 360 FDC எனப்படும் நிலையான கலவை மருந்துகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் மத்திய அரசின் இந்த முடிவால் சிப்லா, லுபின், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் சில மாத்திரைகளின் உற்பத்தி குறைக்கப்பட உள்ளது.

FDC மருந்துகள் என்றால் என்ன?

நிலையான டோஸ் கலவை (FDC-Fixed-dose combination) மருந்துகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துப் பொருட்களின் குறிப்பிட்ட விகிதத்தை உள்ளடக்கிய சிகிச்சைகள் மற்றும் அவை பொதுவாக காக்டெய்ல் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன.

பக்க விளைவுகள் இந்த வகையான மருந்துகளால் ஆன்டிபயாடிக்குகள், ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், வலி ​​நிவாரணிகள், மல்டிவைட்டமின்கள் மற்றும் காய்ச்சல் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கான போன்ற பக்க விளைவுகள் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மருத்துகள் தடை
அந்த வகையில் சிப்லா, டோரண்ட், சன் பார்மா, ஐபிசிஏ லேப்ஸ் மற்றும் லூபின் ஆண்டிபயாடிக் அசித்ரோமைசின் மற்றும் அடாபலீன், Aceclofenac 50mg + Paracetamol 125mg, Paracetamol+Pentazocine, Levocetirizine + Phenylephrine உள்ளிட்ட 156 வகையான மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.