5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் : நாமல் அறிவிப்பு
இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் 5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
திவுலப்பிட்டிய (Divulapitiya) பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான வரிசைகள் ஏற்பட்டிருந்தன.
சம்பள அதிகரிப்பு
எனினும் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான வரிசைகளை ஏற்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது. அதற்காகத் தொழில்நுட்பத்துடன் இணைந்த புதிய வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்.
தேர்தல் காலங்களில் தேர்தல் மேடைகளில் சம்பளங்களை அதிகரிப்பதாக வாக்குறுதியளிக்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
பணவீக்கத்துக்கு முகங்கொடுக்கும் வகையில் அரச பணியாளர்களின் சம்பளம் பணவீக்கத்துக்கு ஏற்றவகையில் மாற்றியமைப்பதற்கான பொறிமுறைமைகள் உருவாக்கப்படும்.“ என தெரிவித்தார்.