115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் ரஷ்யா இடையே UAE மத்தியஸ்தம்
போர் நடவடிக்கையின் போது சிறைப்பிடிக்கப்பட்ட 115 பிணைக் கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த 115 போர் பிணைக் கைதிகள் அமைதியான முறையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊஇந்த பிணைக் கைதிகள் பரிமாற்றத்தை இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்திய மத்தியஸ்தம் நடவடிக்கையில் இருநாடுகளுக்கு இடையிலான பிணைக் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று முடிந்துள்ளது.
Another 115 of our defenders have returned home today. These are warriors of the National Guard, the Armed Forces, the Navy, and the State Border Guard Service.
We remember everyone. We are searching for them and making every effort to bring them all back.
I am grateful to each… pic.twitter.com/XiMAeANsOd
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) August 24, 2024
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த ஆண்டு மட்டும் 7 மத்தியஸ்தம் நடவடிக்கையை இருநாடுகளுக்கும் இடையே நடத்தி இருப்பதாக வளைகுடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்திய மத்தியஸ்தம் நடவடிக்கையில் இதுவரை 1,788 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.