;
Athirady Tamil News

மீண்டும் புலம்பெயர் மக்கள் தொடர்பில் துயரமான செய்தி: பலர் மரணம்

0

ஏமன் அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று ஐநா ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மாயமானவர்களை தேடும் நடவடிக்கை
மிக ஆபத்தான புலம்பெயர் பாதையில் சமீபத்திய பேரிடர் இதுவென கூறுகின்றனர். 25 எத்தியோப்பிய புலம்பெயர் மக்கள் மற்றும் இரண்டு யேமன் நாட்டவர்களுடன் தொடர்புடைய படகானது Djibouti பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளது.

தற்போது படகு மூழ்கிய விபத்தில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

படகு விபத்தில் சிக்கியதற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிறு படகு அல்லது ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் மக்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது.

ஆபத்தில் சிக்குவதாகவே
செங்கடலைக் கடந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை இலக்கு வைக்கும் மக்கள் ஆபத்தில் சிக்குவதாகவே கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 2023ல் மட்டும் 97,200 புலம்பெயர் மக்கள் யேமனில் நுழைந்துள்ளனர்.

சமீபத்திய விபத்தைப் போன்று கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களிலும் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் டசின் கணக்கானவர்கள் மரணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.