பிரித்தானியாவிற்கு வர மேகன் மார்க்கல் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை
இளவரசர் ஹரி மற்றும் குழந்தைகளுடன் பிரித்தானியாவிற்கு வர சில முக்கிய நிபந்தனைகளை கொண்டுள்ளார் மேகன் மார்க்கல்.
மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு திரும்ப விரும்பினால், அது ஒரு “முக்கிய நிபந்தனையுடன்” மட்டுமே இருக்கும் என பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பான நிபுணர் டாம் குவின் (Tom Quinn) கூறியுள்ளார்.
அதாவது, அவருக்கும் இளவரசர் ஹரிக்கும் தனிப்பட்ட வீடு மற்றும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டால் மட்டுமே, மேகன் பிரித்தானியாவிற்கு திரும்ப முன்வருவார்.
மேகன் மற்றும் ஹரி ஆகியோருக்கு தாங்கள் மற்றும் தங்கள் குழந்தைகள் பிரித்தானியாவில் வாழவும், அங்கே பாதுகாப்பாக இருக்கவும் தனி வீடு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேகன் மற்றும் ஹரி இருவரும் 2020ல் அரச குடும்பத்தில் இருந்து விலகி, கலிபோர்னியாவில் வசிக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகு அவர்கள் சிலமுறை மட்டுமே பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பு மற்றும் இருப்பிடம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனக் கூறிய மேகன், அப்போதுதான் தங்கள் குழந்தைகள் ஆர்சியும் லிலியும் பிரித்தானியாவில் தங்கள் உறவினர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்க முடியும் என அவர் நம்புகிறார்.
2022-ல் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு மட்டும் மேகன் பிரித்தானியாவிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.