பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 11 ஈரான் பக்தர்கள் உயிரிழப்பு! 35 பேர் காயம்
பாகிஸ்தானில் ஈரானிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, வேக கட்டுபாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் – பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஈரானிலிருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்றையதினம் (25-08-2024) பஞ்சாப் நோக்கி சென்ற பேருந்து, சாரிதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், 35 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் லாகூர் அல்லது குர்ரன்வாலாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.