வடக்கு அயர்லாந்து குடியிருப்பில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: குற்றவாளிக்கு வலைவீசும் பொலிஸார்
வடக்கு அயர்லாந்தில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பெண் உயிரிழப்பு
வடக்கு அயர்லாந்தின் Londonderry உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பயங்கர சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை காலை 4.15 மணியளவில் Harvey தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள படுக்கை அறையில் இருந்த 40 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண் மீட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
கொலை விசாரணை
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கொலை விசாரணையை வடக்கு அயர்லாந்து பொலிஸ் சேவை தொடங்கியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் தலைமை காவலர் Anthony Kelly தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதில் பாதிக்கப்பட்டவர் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் மற்றும் பல காயங்களுக்கு ஆளாகியுள்ளார் என்பதை தற்போதைய நிலைமையில் எங்களால் சொல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பான விவரம் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸார் விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.