ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிரிய இளைஞர்
ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேரை கொன்றதாக சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜேர்மனியில் சோலிங்கன் (Solingen) நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டு, எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில், 56 மற்றும் 67 வயதான இரு ஆண்கள் மற்றும் 56 வயதுடைய ஒரு பெண் கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்தவர்களில் நால்வர் மோசமான நிலையில் உள்ளனர்.
இந்த தாக்குதல் ஜேர்மனியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சால்ஜிங்கென் நகரில் நடந்த Festival of Diversity) எனும் ஒரு நிகழ்ச்சிக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. தாக்குதல் தொடர்பாக உள்ளூர் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலை குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இச்சம்பவத்தின் பின்னால் பயங்கரவாத நோக்கம் இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இதற்கான விசாரணைகளை தேசிய பயங்கரவாத தடுக்கும் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இத்தாக்குதலை நடத்தியதாக 26 வயதான சிரியா நாட்டை சேர்ந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் உட்பட முக்கிய தலைவர்கள், இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.
ஜேர்மனியில் 2015-2016 ல் அதிகமான அகதி வருகைகள் ஏற்பட்டதில் இருந்து, இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது, ஜேர்மனியில் தொடர்ச்சியாக எச்சரிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.