;
Athirady Tamil News

பதிலடி கொடுத்த ரஷ்யா: ஏவுகணைகள் – ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல்

0

உக்ரைன் (Ukraine) தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்ய (Russia) இராணுவம் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில் இந்த ட்ரோன்களை தங்களின் இராணுவம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.

குடியிருப்பு கட்டடிடம்
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் சராதோவ் (Saratov) பகுதியில் உக்ரைன் ட்ரோன்களை ஏவி சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது, உக்ரைனின் 20 ட்ரோன்களை ரஷ்யா தாக்கி அழித்துள்ளது இதனால் வானிலேயே தகர்க்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியில் உள்ள 38 மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்துள்ளது.

ராட்சத ஏவுகணைகள்
இந்த நிலையில் உக்ரைன் பகுதிகள் மீது ரஷ்யா விடாமல் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ராட்சத ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், மற்றும் மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார உற்பத்தி
குறிப்பாக, நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ரஷ்ய வான்வழித் தாக்குதல்களால் 15 பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், தாக்குதலுக்கு உள்ளான 15 நகரங்களில் குறிப்பாக லெவிவ் மின்சாரம் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த தாக்குதலால் நீர் விநோயாகம் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.