;
Athirady Tamil News

ஹமாஸ் தாக்குதலைப்போல இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகும் அமைப்பு: அதிகரிக்கும் பதற்றம்

0

அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப்போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு தயாராவதாக வெளியாகியுள்ள தகவல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை வீசிய ஹிஸ்புல்லா
நேற்று காலை, லெபனானை மையமாக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்காக ஏவுகணைகளை ஏவியது.

ஆனால், கிடைத்த உளவுத்துறை தகவல் மூலம் தககுதல் குறித்து முன் அறிந்த இஸ்ரேல், பெரும்பாலான ஏவுகணைகளைத் தடுத்துவிட்டது.

ஆனால், இது வெறும் முதல் கட்ட தாக்குதல்தான், ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதியான Fuad Shukrஐ இஸ்ரேல் கொன்றதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவரான Hassan Nasrallah என்பவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் மீது மீண்டும் ஒரு தாக்குதலுக்குத் தயாராகும் அமைப்பு

இந்நிலையில், மத்திய கிழக்கு நிபுணரும், The Jerusalem Post பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான Yaakov Katz என்பவர், அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப்போல, மீண்டும் இஸ்ரேலின் வடக்கு எல்லையில், ஒரு தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு தயாராகக் கூடும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹிஸ்புல்லா அப்படி இஸ்ரேல் மீது தககுதல் நடத்துமானால், பதிலுக்கு இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த அது தூண்டும் என்கிறார் Yaakov.

அப்புறம், நாம் பெரிய அளவிலான ஒரு போரை நோக்கிச் செல்லும் பாதையில்தான் செல்ல நேரிடும் என்று கூறியுள்ளார் அவர். அதாவது, மத்திய கிழக்குப் பகுதியில் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்கலாம் என்கிறார் Yaakov.

You might also like

Leave A Reply

Your email address will not be published.