அடுத்த மாதம் முதல்… சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்கும் சுவிஸ் மாகாணம்
சுவிஸ் மாகாணம் ஒன்று, அடுத்த மாதம் முதல் சிறைக்கைதிகளுக்கு முக்கிய வேலை ஒன்றை வழங்க உள்ளது.
சிறைக்கைதிகளுக்கு வேலை
அடுத்த மாதம் முதல், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கார் லைசன்ஸ் பிளேட்டுகளை சிறைக்கைதிகள் தயாரிக்க இருக்கிறார்கள்.
ஜெனீவா மாகாணத்திலுள்ள Puplinge என்னுமிடத்தில், Brenaz என்னும் சிறை ஒன்று உள்ளது. அதில் சுமார் 200 ஆண் சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
ஜெனீவா மாகாணத்திலுள்ள வாகனங்கள் அலுவலகம், லைசன்ஸ் பிளேட்கள் தயாரிப்பதற்காக சமீபத்தில் டெண்டட் விட்டது. அந்த டெண்டர் Brenaz சிறைக்கு கிடைத்துள்ளது.
ஆகவே, இனி ஜெனீவா மாகாணத்தின் கார் லைசன்ஸ் பிளேட்டுகளை Brenaz சிறையிலுள்ள கைதிகள் தயாரிக்க இருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில், சிறைக்கைதிகள் வேலை செய்ய சட்டப்படி உரிமை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.