ஐஸ்லாந்தில் இடிந்து விழுந்த பனி குகை: காணாமல் போன சுற்றுலா பயணிகள்!
ஐஸ்லாந்தில் பனி குகை இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடிந்து விழுந்த பனி குகை
சுற்றுலா குழு ஒன்று ஐஸ்லாந்தின் பனிப்பாறை பகுதிக்கு சென்று இருந்த போது பனி குகை ஒன்று இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார், அத்துடன் 2 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.
25 சுற்றுலா பயணிகளை கொண்ட குழு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Breioamerkurjokull பனிப்பாறை பகுதிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சுற்றுலா பயணத்தை மேற்கொண்ட போது குகையின் பனி சுவர் ஒன்று இடிந்து விழுந்தது.
தற்போதைய நிலவரப்படி விபத்தில் சிக்கிய நபர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.
மீட்பு பணி தீவிரம்
பனிக்கட்டிகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாக நம்பப்படும் இரண்டு சுற்றுலா பயணிகளை மீட்கும் சிக்கலான இந்த மீட்பு பணியில் 200 பேர் வரை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களில் 2 சுற்றுலா பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த மற்றொரு நபர் ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவரின் நிலை தற்போது நிலையாக உள்ளது.
பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.