புற்றுநோயுடன் போராடிய பிரபல WWE வீரர் மரணம்
பிரபல மல்யுத்த (WWE) வீரர் Sid Eudy தனது 63வது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் Arkansasஐச் சேர்ந்த மல்யுத்த வீரர் Sidney Raymond Eudy என்கிற Sid Eudy (63).
WWFயில் 1989யில் அறிமுகமான இவர் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றார். அதேபோல் 6 முறை உலக சாம்பியனாக இருந்திருக்கிறார்.
2001யில் படுகாயமடைந்து அதிலிருந்து மீண்டு வந்த Sid Eudy, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார்.
இந்த நிலையில் Sid Eudy உயிரிழந்துவிட்டதாக அவரது மகன் Gunnar தெரிவித்துள்ளார்.
புற்றுநோயுடன் போராடி
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை Sid Eudy பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருந்துகிறேன். அவர் வலிமை, கருணை மற்றும் அன்பு கொண்ட மனிதராக இருந்தார். அவரின் இருப்பை பெரிதும் தவறவிடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
WWEயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், 2001யில் காலில் காயம் ஏற்படவில்லையென்றால் சிட்டின் வெற்றிகள் WWE வரலாற்றில் சிறந்தவற்றில் அடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளது.
Sid Eudyயின் மறைவுக்கு அவருடன் பணியாற்றியவர்கள், ரசிகர்கள் என பலரும் வேதனையையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.