வெறும் வயிற்றில் வெந்நீரில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து குடிங்க! கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் நெய் கலந்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நெய்
ஆதிக கால ஆயுர்வேத நூல்கள் தொடங்கி இன்றைய மருத்துவ நிபுணர்கள் வரை ஆரோக்கியமாக இருப்பதற்கு நெய் சாப்பிடுவதற்கு அறிவுறுத்துகின்றனர்.
சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண்ணிலிருந்து வயிற்றுப்புண் வரைக்கும் அனைத்தும் தலைதெறிக்க ஓடிவிடும்.
நெய்யில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கியுள்ள நிலையில், இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆயுர்வேத கூற்றின்படி, வாத மற்றும் பித்த பிரச்சனைகளை தவிர்க்க நெய் அவசியம். நெய்யை உணவுடன் எடுத்து கொள்வதை விடவும், வெறும்வயிற்றில் வெந்நீருடன் எடுத்து கொள்வதால் அதிக பலன்களை பெறலாம்.
வெந்நீருடன் நெய்
நெய் உண்பதால் உடல் எடை அதிகமாகும் என்றாலும், இதனை குறைவாக எடுத்துக் கொள்ளும் போது நன்மை அளிக்கின்றது. வெந்நீருடன் நெய் கலந்து குடித்தால் வயிற்றிலுள்ள கொழுப்பு கரையுமாம்.
வளர்சிதை மாற்றம் மேம்படுவதுடன், ஆற்றலும் அதிகரிக்கின்றது. இதயம், மூளை ஆரோக்கியமாக இருப்பதுடன், குடல் இயக்கத்திற்கு உஉதவுகின்றது. இதனால் செரிமானம் மேம்படுவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்கின்றது.
மன ஆரோக்கியம், நினைவாற்றலை மேம்படுத்த உதவும் இவை மூளைக்கு டானிக் போன்று செயல்படுமாம். மூளையையும், நரம்பு மண்டலத்தையும் வலுப்படுத்துவதுடன், நெய்யை வெந்நீரில் கலந்து அருந்துவதால் நரம்பு மண்டலத்தில் நல்ல மாற்றம் ஏற்படுவதுடன், கவலை உள்ளிட்ட மூளையை பாதிக்கும் கோளாறுகளையும் போக்குகின்றது.
அதிகப்படியான வைட்டமின்கள் உள்ள நிலையில், நல்ல கொழுப்புகளை உடம்பில் பராமரித்து, கெட்ட கொழுப்புகளை குறைக்கவும், இதய நோய் ஏற்படுத்தும் வாய்ப்பையும் குறைக்கின்றது.
சருமத்திற்கு பளபளப்பை கொடுப்பதுடன், சரும வறட்சி நீங்க நெய் கலந்த வெந்நீரை தொடர்ந்து பருகலாம்.
காலை எழுந்ததும் 200 மில்லி சூடான தண்ணீரில் 1 ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் கலந்து நன்கு கலக்கி வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.