கிளி. டிப்போ சந்தியில், கல்விக்கு ஆதரவாக இராணுவத் தளபதியால் சிமிக் பூங்கா திறந்து வைப்பு
55ஆவது காலாட் படைப்பிரிவின் முயற்சியான “கிளிநொச்சி சிமிக் பூங்கா”, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த பூங்கா நேற்று முன்தினம்(25) திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி சமூகத்தின் கல்வித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், உள்ளூர் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வளங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பூங்கா இலவச வைபை, கற்றல் பகுதிகள், கழிவறைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சார வசதிகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் இவை அனைத்தும் சமூகத்திற்கான கற்றல் சூழலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.