சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பையால் பரபரப்பு
சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் ஏற்படுத்திய அச்சம்
கடந்த வாரம், ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த ஒருவர், தன் வீட்டின் முன் குப்பைக் கவர் ஒன்று கிடப்பதைக் கண்டு, அதை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
அவர் அதை எடுத்ததும், அது வெடித்துச் சிதறியுள்ளது. அதாவது, அந்தக் கவருக்குள் சிறிய வெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு, அதை எடுத்ததும் வெடிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சம்பவம் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது என்பது நேற்று நிகழ்ந்த சம்பவம் மூலம் உறுதியாகியுள்ளது.
அநாதரவாக விடப்பட்ட பையால் பரபரப்பு
நேற்று காலை, ஜெனீவாவிலுள்ள rue du Mont Blanc என்னுமிடத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் ஒன்றில், ஒரு பை அநாதரவாக விடப்பட்டிருந்தது.
உடனடியாக அங்கு ஜெனீவா மாகாண வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
அவர்கள் அந்த பகுதியிலுள்ள சாலைகளில் போக்குவரத்தை தடை செய்து, அந்த பையை சோதித்தபோது, அதில் ஆபத்தை ஏற்படுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.