;
Athirady Tamil News

உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா: நள்ளிரவில் மீண்டும் தாக்குதல்

0

உக்ரைன் மீது, மீண்டும் ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா
உக்ரைன் மீது நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய தாக்குதலில் Zaporizhzhiaவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

Kryvyi Rig நகரில் இரண்டு பேரைக் காணவில்லை. அவர்கள், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே திங்களன்று உக்ரைன் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது மீண்டும் நேற்று துவங்கி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா.

ரஷ்யாவின் குண்டு வீசும் விமானங்கள் வானில் பறந்ததைத் தொடர்ந்து, உக்ரைன் அதிகாரிகள் நாடு முழுவதும் அது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ள செய்தி


இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்காளாகி கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து பொதுமக்கள் சிலர் மீட்கப்படும் காட்சி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று இரவு ரஷ்யாவால் தாக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

துரதிர்ஷ்டவசமாக, தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 16 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொத்தத்தில், பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு எதிராக 90 க்கும் மேற்பட்ட வான்வழி இலக்குகளையும் 81 Shahed ட்ரோன்கள், அத்துடன் கப்பல், பாலிஸ்டிக் மற்றும் விமானத்திலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும் எதிரிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

அனைத்து தாக்குதல்களுக்கும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ரஷ்யாவிற்கு பதிலளிப்போம். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.