வெஸ்ட் பேங்க் நகரை சிறைப்பிடித்த இஸ்ரேலிய படைகள்! நுழைவு, வெளியேறும் புள்ளிகளை அடைப்பு
வெஸ்ட் பேங்க் நகர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேஸ்ட் பேங்க் நகர் மீது தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் வேஸ்ட் பேங்க் நகர் மீது நடத்திய தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட வேஸ்ட் பேங்க் முழுவதும் சோதனையிட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர்(IDF) ஜெனின் நகரை சீல் வைத்துள்ளனர்.
இஸ்ரேலிய படையினர் நகரை சுற்றி வளைத்ததோடு, வெளியேறும் வழி, நுழைவு புள்ளிகள் மற்றும் மருத்துவமனையின் அணுகல் ஆகியவற்றை தடுத்து இருப்பதாக என ஜெனின் நகர கவர்னர் Kamal Abu al Rub பாலஸ்தீன வானொலியில் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட 9 பேர்
வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள ஜெனின் மற்றும் துல்கர்ம் நகரங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த நடவடிக்கையில் வெஸ்ட் பேங்க்கின் மற்றொரு நகரான Tubas புதன்கிழமை 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மற்ற 2 பேர் ஜெனின் நகரில் கொல்லப்பட்டு இருப்பதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.