பிரதமர் நாட்டில் இல்லாத நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்
நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, அந்த தானியங்கி அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதில் பிரச்சினை ஏற்பட, அங்கு குழப்பம் உருவாகியுள்ளது.
ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய அலுவலர்கள், டிஜிட்டல் பாஸ்கள் உதவியுடன்தான் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள்.
ஆனால், சில நுழைவாயில்களில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவை வழியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. எதனால் அந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
விடயம் என்னவென்றால், இந்தக் குழப்பம் நிகழ்ந்தபோது பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவில் இல்லை. அவர் ஜேர்மனி மற்றும் பிரான்சுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார்.