;
Athirady Tamil News

இரட்டையர்களில் ஒருவர் ஆசிய இளம்பெண், மற்றொருவர் வெள்ளையினப்பெண்: ஒரு ஆச்சரிய தகவல்

0

அந்த இளம்பெண்களைப் பார்த்தால், யாரும் அவர்களை இரட்டையர்கள் என்று கூறமாட்டார்கள். காரணம், அவர்களில் ஒருவர் ஆசிய இனத்தவர், மற்றவர் வெள்ளையினத்தவர்.

ஆனால், அவர்கள் ஒரு தாயின் வயிற்றில் ஒரே நேரத்தில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்!

இது எப்படி சாத்தியம்?
இது எப்படி சாத்தியம் என மற்றவர்களைப்போலவே உங்களுக்கும் சந்தேகம் எழலாம். ஒருவேளை இருவரின் தந்தையர்களும் வேறு வேறு நபர்களோ என்ற எண்ணமும் எழலாம். உண்மையும் அதுதான்!

அபூர்வ இரட்டையர்கள்
இரட்டையர்களில் ஒருவரான லிப்பி (Libby), ஆசிய இனத்தவர், அடர் பழுப்பு நிற கூந்தலும், பழுப்பு நிறக் கண்களும் கொண்டவர்.

மற்றவர் பெயர் சப்ரினா (Zabrina), அவர் வெள்ளையினத்தவர். அவர் பொன்னிறக் கூந்தலும் நீல நிறக் கண்களும் கொண்டவர்.

மோசமான பின்னணிதான்…
விடயம் என்னவென்றால், லிப்பி, சப்ரினாவின் தாய், லிப்பியின் தந்தையைக் காதலிக்குபோதே, சப்ரினாவின் தந்தையுடன் தவறான உறவில் இருந்திருக்கிறார்.

அவரது கருமுட்டை ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களின் உயிரணுக்களால் கருவுற்றிருக்கிறது. அவரது கருவில் இரண்டு வெவ்வேறு தந்தைகளால் உருவான இரட்டைக் குழந்தைகள் உருவாகியுள்ளன.

இது ஒரு அபூர்வ நிகழ்வு. மருத்துவத்தில், அது heteropaternal superfecundation என அழைக்கப்படுகிறது.

11 வயதில் தெரியவந்த உண்மை
விடயம் வெளியில் வந்ததும், அந்தக் குழந்தைகளை வளர்க்க அந்த தாய்க்கு தகுதி இல்லை எனக் கூறி, குழந்தைகள் அதனதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.

இருவரும் உறவினர்கள் எனக் கூறி வளர்க்கப்பட்டுள்ளார்கள். 11 வயதாகும்போது, நீங்கள் இருவரும் இரட்டையர்கள் என அவர்களுடைய தந்தைகள் பிள்ளைகளிடம் உண்மையைக் கூறியுள்ளார்கள்.

உறவினர் என நினைத்து பழகிய பெண் தனது சொந்த சகோதரி எனத் தெரியவரவே இருவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.