நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க! வடிவேல் சுரேஷ் புகழாரம்
அனுபவமுள்ள நாட்டை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.
கொழுப்பில் நேற்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
“இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஒரு அனுபவசாளி ஒருவருக்கு மாத்திரம் இந்த நாட்டடை வழிநடத்தி செல்ல வழியினை ஏற்படுத்தி கொடுத்தால் மாத்திரமே இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகிய மக்களுக்கு நல்லதாக அமையும்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 39 பேரில் புதிதாக ஒருவருக்கு இந்த நாட்டை ஒப்படைத்தால் நாட்டை வழிநடத்தி செல்ல முடியாது புதிதாக ஒருவர் நாட்டை பொறுப்பேற்றால் பயிற்சியினை மேற்கொள்ள மாத்திரம் தான் முடியும்.
அவர்கள் பயிற்சினை முடித்து நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்பு இந்த நாட்டைவிட்டு எமது உயிர்கள் பிரிந்து விடும். பயிற்சிபெறுவதற்கு இங்கு அனுமதி வழங்க நேரகாலங்கள் போதாது ஆகவே அனுபவம் வாய்ந்தவர்களிடம் இந்த நாட்டை மக்கள் கையளித்தால் சிறந்த வேளைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல கூடியதாக அமையும்.
மக்கள் சரியான முறையில் கேஷ் சிலிண்டருக்கு வாக்களித்தால் கேஷ்சிலிண்டர் நமது வீடுகளை தேடி வரும் இல்லாவிட்டால் மக்களாகிய நாம் கேஷ்சிலிண்டர்களை தேடி வீதிக்கு செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படும்.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வரிசையுகம் என்பன காணப்பட்டபோது நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
மக்களின் சம்பள பிரச்சினை
இந் நிலையில் இந்த நாட்டை பொறுப்பேட்க மறுப்பு தெரிவித்தவர்கள் இன்று 39 பேர் ஜனாதிபதி வேட்பாளாக போட்டியிடுகின்றார்கள் அன்று இந்த நாட்டில் இருந்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பொறுப்பேற்க எவரும் முன் வரவில்லை.
மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினை கடந்த நான்கு வருடங்கலாக காணப்படுகின்றது அதேபோல் பெருந்தோட்ட மக்களின் காணிப்பிரச்சினையும் உரிமை தொடா்பான பிரச்சினைகளும் 200வருடங்களாக இருக்கிறது.
ஆனால் தேவையான பொது ஓடி ஒழிந்தவர்கள் இன்று மலையக மக்கள் மீது அன்பு கொண்டு மலையக மக்களை தேடிகொண்டு வாக்கு சேகரிக்க முயற்சி செய்கிறார்கள்.
இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்காக இன்று நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களை சந்திக்க விஜயம் செய்வது வினோதமாக உள்ளது” என குறிப்பிட்டார்.