கிளப் வசந்த கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்
தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா(கிளப் வசந்த) உட்பட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர் பாணந்துறையில்வைத்து இன்று (29.08.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இவர், மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரின் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளப் வசந்த கொலை
கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 25 நாட்கள் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர் 55 வயதுடையவர் எனவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.