சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை: பிரான்ஸ் சோதனை முயற்சி
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.
சோதனை முயற்சி
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத் துவக்கியுள்ளது.
அதன்படி, பள்ளிக்கு வரும் மாணவ மாணவியரில், 15 வயது வரையுடையவர்கள் பள்ளியின் ரிசப்ஷனில் இருக்கும் ஊழியரிடம் தங்கள் மொபைல்களை ஒப்படைத்துவிடவேண்டும்.
200 பள்ளிகள் இந்த சோதனை முயற்சியில் பங்கேற்க உள்ளன.
பள்ளிகளில் மொபைலுக்கு தடை விதிக்கும் இந்த சோதனை முயற்சியை, தற்போது பிரான்ஸ் அரசில் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் Nicole Belloubet நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.