பாரிஸில் பிரெக்சிட் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பேசிய பிரதமர் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் பிரெக்சிட் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாரிஸில் ஸ்டார்மர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer), பெர்லின் பயணத்திற்கு பின் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கிறார்.
நேற்றிரவு பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் ஸ்டார்மர் மற்றும் ஜனாதிபதி மேக்ரான் (Macron) இருவரும் பார்வையாளர்களுடன் இருந்தனர்.
பின்னர் பாரா ஒலிம்பிற்கான அவர்களின் தயாரிப்பு, மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுக்கான அணுகல் மற்றும் அடுத்த தலைமுறைக்கு உத்வேகம் அளிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
பிரெக்சிட்டை மாற்றியமைக்கவில்லை
ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான பேச்சுவார்த்தையின்போது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவுகளை பிரான்ஸ் மாற்றியமைப்பதற்கான தனது உந்துதலைத் தொடர்ந்தார்.
முன்னதாக, பெர்லினில் பேசிய பிரதமர் ஸ்டார்மர், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் மீட்டமைக்க விரும்பினாலும், கூட்டமைப்புடன் நெருக்கமான உறவுகள் இருந்தபோதிலும், தான் பிரெக்சிட்டை மாற்றியமைக்கவில்லை என்று வலியுறுத்தினார்.
மேலும், முற்போக்கு கட்சிகள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஜனரஞ்சகவாதம் மற்றும் தேசியவாத பாம்பு எண்ணெய்க்கு மாற்று மருந்தாகும் என அவர் குறிப்பிட்டார்.