;
Athirady Tamil News

லண்டனில் Mobility Scooterயில் பயணித்த நபருக்கு நேர்ந்த கொடூரம்

0

பிரித்தானியாவில் 38 வயதுடைய நபர் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், பொலிஸார் இருவரை கைது செய்தனர்.

சம்பவ இடத்திலேயே
கிழக்கு லண்டனில் உள்ள Hackney பகுதியில் ஜேட் அந்தோனி பார்னெட் (38) என்ற நபர், தனது Mobility Scooterயில் சென்றுகொண்டிருந்தபோது கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

அவர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்து தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பார்னெட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருவர் கைது
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 28 வயதுடைய இருவரை மெட் பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் கிழக்கு லண்டன் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துப்பறியும் தலைமை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் கான்வே கூறுகையில், “எங்கள் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இன்று மதியம் என்ன நடந்தது என்பதற்கான சூழ்நிலையை நிறுவ, எனது துப்பறியும் நபர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பார்னெட்டின் சகோதரி Simone Barnett கூறும்போது, தனது சகோதரர் மகிழ்ச்சியான மற்றும் அக்கறையுள்ள மனிதர் என்றும், அவர் பெரிதாக எதையும் எடுத்துக்கொள்ளமாட்டார் என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.