;
Athirady Tamil News

வெளிநாட்டவர்களுக்கு மேலும் ஒரு மோசமான செய்தியை தெரிவித்துள்ள கனடா

0

கனடாவுக்கு Visitor visaவில் வந்துள்ளவர்கள், இனி கனடாவிலிருந்தவண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது.

முடிவுக்கு வந்த விதி
2020ஆம் ஆண்டு ஆகத்து மாதம், கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, கனடாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை நிலவியதால், அவர்களுக்கு உதவும் வகையில், அவர்கள் பணி செய்ய பணி அனுமதி வழங்க அரசு ஆவன செய்தது.

ஆனால், அந்த விதி, நேற்றுடன், அதாவது, ஆகத்து மாதம் 28ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

அதாவது, visitor visa பெற்று கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் இனி கனடாவில் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கமுடியாது.

விடயம் என்னவென்றால், visitor visa பெற்று கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்கள் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் திட்டம் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் காலாவதியாக இருந்தது.

ஆனால், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் தங்கியிருப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அந்த திட்டத்தை திடீரென முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.