லட்டுக்கு ஆதார் கட்டாயம்.. திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே லட்டு பிரசாதம் வழங்கப்படும் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் திருப்பதியில் பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவப் பிராமணர்கள் சார்பில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
ஆதார் அட்டை
மேலும் கூடுதல் லட்டு தேவைப்படுபவர்களுக்கு லட்டு கவுண்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறை இன்றுவரை வழக்கத்தில் உள்ளது.இதனைத் தொடர்ந்து சமீபகாலமாக இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு லட்டு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது .
இந்நிலையில் பக்தர்களுக்கு ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆதார் அட்டையைக் காண்பித்தால் மட்டுமே கூடுதலாக ஒரு லட்டு ரூ.50 க்கு வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.