வேஸ்ட் பேங்க் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: உள்ளூர் தளபதி உள்பட 5 பேர் பலி
வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைந்துள்ள மசூதிக்குள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சோதனையிடும் இஸ்ரேலிய படைகள்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் சோதனையை நடத்தி வருகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட வேஸ்ட் பேங்க் முழுவதும் சோதனையிட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர்(IDF) ஜெனின் நகரை சீல் வைத்தனர்.
மேலும் ஜெனின் மற்றும் துபாஸ் நகரில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மசூதி மீது தாக்குதல்
இந்நிலையில் வெஸ்ட் பேங்க் பகுதியில் அமைந்துள்ள மசூதி மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ள தகவலில், Tulkarm பகுதியில் அமைந்துள்ள மசூதிக்குள் மறைந்து இருந்த 5 பாலஸ்தீன போராளிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் மசூதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட 5 பேரில் நன்கு அறிந்த உள்ளூர் தளபதி ஒருவர் அடங்கியிருப்பதாக IDF தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய படைகள் வெஸ்ட் பேங்க் பகுதிக்கு புதன்கிழமை நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள், கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.