;
Athirady Tamil News

அரியணையேறும் வரிசையில் ஹரி மேகன் குழந்தைகள்: அவர்களுக்கு இது தெரியுமா?

0

பிரித்தானியாவை விட்டும், ராஜ குடும்பத்தைவிட்டும் வெளியேறி தன் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியமர்ந்துவிட்டார் ஹரி.

ஆனாலும், ஹரி மேகன் தம்பதியரின் பிள்ளைகள், பிரித்தானிய அரியணையேறும் வரிசையில், ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் உள்ளார்கள்.

அரியணையேறும் வரிசையில் ஹரி மேகன் குழந்தைகள்
ஹரியும் மேகனும் பிரித்தானியாவை விட்டு வெளியேறினாலும், அவர்களுடைய மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சி பிரித்தானிய அரியணையேறும் வரிசையில் ஆறாவது இடத்திலும், தம்பதியரின் இரண்டாவது மகளான குட்டி இளவரசி லிலிபெட் ஏழாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இது தெரியுமா?
ஆனால், அமெரிக்காவில் சாதாரணமாக வாழ்ந்துவரும் தாங்கள், பிரித்தானிய அரியணையேறும் வரிசையில் உள்ளவர்கள் என்பது அந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா?

உண்மையில், ஆர்ச்சியும் லிலிபெட்டும், காலப்போக்கில் தங்களுக்கும் ராஜ குடும்பத்துக்கும் உள்ள உறவைக் குறித்து அறிந்துகொள்வார்கள் என்கிறார்கள், ராஜ குடும்ப நிபுணர்கள்.

தங்கள் பிள்ளைகள் அரியணையேறும் வரிசையில் உள்ளவர்கள் என்பதை, ஹரியும் மேகனும், சரியான நேரத்தில் அவர்களுக்கு தெரியப்படுத்த இருப்பதாக தம்பதியருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.