;
Athirady Tamil News

தாயை கொலைசெய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மகன்

0

இந்திய மாநிலம் குஜராத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தனது தாயைக் கொன்றுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாயுடன் வாக்குவாதம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்தவர் நிலேஷ் (21). இவரது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை பிரிந்துவிட்டார். இதனால் நிலேஷ் தனது தாயுடன் வசித்து வந்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட நிலேஷின் தாய் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நிலேஷிற்கும் அவரது தாய்க்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் நிலேஷ் அவரை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நிலேஷ் பகிர்ந்துள்ளார்.

நான் உங்களை கொன்றுவிட்டேன்
அத்துடன் “என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ” என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்துள்ளனர்.

அங்கு நிலேஷ் தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்தனர்.

மேலும், அப்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், பின்னர் அவரின் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அவர் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு பொலிஸாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.