சஜித்திற்கான ஆதரவை வெளிப்படுத்திய மாவை சேனாதிராஜா
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்படும் கூட்டங்களில் ஆராயப்படும் என்றும் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
மத்திய செயற்குழு கூட்டம்
அத்தோடு, வவுனியாவில் நேற்று (01) இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சுகவீனம் காரணமாக கலந்துக் கொள்ள முடியாமல் போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.