பிரான்சில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைக்கு செல்லப்பிராணியால் நேர்ந்த துயரம்
பிரான்சில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று, அதன் தாத்தா பாட்டி வளர்த்த செல்லப்பிராணியாலேயே கொல்லப்பட்ட அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
குழந்தையைக் கவ்விச் சென்ற நாய்
கிழக்கு பிரான்சிலுள்ள Ain என்னுமிடத்தில் வாழும் ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறந்து சில நாட்களே ஆகியுள்ளது.
தன் பாட்டில் வீட்டில் அந்தக் குழந்தை தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று அந்தக் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளது.
அந்தக் குடும்பத்தினர் அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்திருக்கும் நேரத்தில், நாய் குழந்தையைத் தூக்கிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவர்களால் குழந்தையை உயிரற்ற நிலையில்தான் மீட்கமுடிந்துள்ளது.
குழந்தையைக் கொன்ற அந்த நாய் கருணைக்கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.